சுவிட்சர்லாந்தில் ஈஸ்டர் பண்டிகைக்கு போதுமான முட்டைகள் இல்லை
சுவிட்சர்லாந்தில் ஈஸ்டர் பண்டிகைக்கு போதுமான முட்டைகள் இல்லை!!
சுவிட்சர்லாந்து நாடு தொழிலாளர் பற்றாக்குறையை மட்டுமல்லாமல்இ முட்டை தட்டுப்பாட்டையும் சமாளிக்க வேண்டும் என தோன்றுகிறது .
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, சுவிட்சர்லாந்தில் முட்டைக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இது சில்லறை விற்பனையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் குறைவான மக்கள் முட்டைகளை வாங்கியிருந்தார்கள். இப்போது முட்டைகளுக்கான போதுமான கையிருப்பு இல்லாததால் தேவை அதிகரித்துள்ளது.
ஈஸ்டருக்கு முன் பற்றாக்குறை உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் பலர் முட்டை சாப்பிடமுடியாமல் போவற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலியான மிகரோஸ் போன்ற கடைகளில் முட்டைகள் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இத்தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய வேறு நாடுகளில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.