சுவிஸ் – ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு
சுவிஸ் – ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு சுவிட்சர்லாந்து மற்றும் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னேசியோ காசீஸ் மற்றும் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கி லெவ்ரொவ் ஆகியோர் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
உக்ரைன் சமாதான பேச்சுவார்த்தை தொடர்பில் பேசப்பட்டு வரும் பின்னணியில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
பல்வேறு முக்கியமான விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனை ரஸ்யாவிற்கு எதிரான போருக்கான கருவியாக பயன்படுத்தாத தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ரஸ்யா கூறியுள்ளதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.