சுவிட்சர்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்களுக்கான முதல் பாடகர் குழு
சுவிட்சர்லாந்தில் தற்போது ஓரின சேர்க்கையாளர்களுக்கான முதல் பாடகர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
யோடலிங் என்ற சுவிஸ் கலை பெரும்பாலும் பாரம்பரிய மற்றும் பழமைவாத சூழலுடன் தொடர்புடையது என்பதால், ஓரினச்சேர்க்கையாளர்கள் இந்த சூழலில் வசதியாக இருப்பது கடினம் என்று ஓரினச்சேர்க்கையாளர் ஃபிரான்ஸ்-மார்கஸ் ஸ்டேடெல்மேன் கூறுகிறார்.
எனவே அவர் சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் மத்திய பகுதியில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான முதல் யோடலிங் குழுவை நிறுவினார். இருபாலுறவு கொண்ட ஆண்களும் வரவேற்கப்படுகிறார்கள்.
இருப்பினும் அவர்கள் சேர விரும்ப மாட்டார்கள். ஏனெனில் மக்கள் தங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று நினைப்பார்கள்’ என்று ஸ்டேடெல்மேன் சுவிட்சர்லாந்தின் பிரபல ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்தார்.
இதுவரை, அவரது குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஜனவரி 27 ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்ட ஒத்திகைக்கு அதன் குழு குறைந்தது 20 பேரை அடையும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.