சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம்.!!
சுவிட்சர்லாந்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு உடல் உறுப்பு தானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டை விடவும் 2023ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 22 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அதிகளவில் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் உடல் உறுப்பு தானத் பெற்றுக் கொள்ள காத்திருப்போர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்தவர்களிடமிருந்து 565 பேர் உடல் உறுப்புக்களை தானமாக பெற்றுக்கொண்டுள்ளனர்.